Header Ads



2 மில்லியன் குவைத் தினாருக்கு விற்கப்பட்ட ஒட்டகம்


குவைத்தில் பிடோர் எனும் ஒட்டகம் ரூபா 82 கோடிக்கு விற்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு கின்னஸ் சாதனையாகவும் இடம் பெற்றுள்ளது. இத்தகவலை குவைத்திலிருந்து வெளிவரும் அல்-ஷாஹித் எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்கான காரணத்தை ஒட்டகத்தின் உரிமையாளர் கூறும் போது அந்த ஒட்டகம் தனித்துவமானதும் எல்லையற்ற அழகும் உடையதாகும் என்று கூறினார். மேலும் இவ்வொட்டகம் முஸ்லீம்களின் இறை தூதுவரான முஹம்மதும் அவர் தோழர்களும் பயன்படுத்திய ஒட்டகங்களின் வம்சாவழியில் வந்தது என்றும் கூறினார்.

மேலும் இந்த ஒட்டகத்தின் தொகையான 2 மில்லியன் குவைத் தினார்களை [(இலங்கை ரூபா 82 கோடி) (இந்திய ரூபா 37 கோடி)]  பணமாகவே பெற்றுள்ளார். செக் அல்லது டி.டி பெற்று கொள்ள மறுத்து விட்டார். நவீன கார்கள் என்ன ஒரு சிறு சொகுசு ஜெட்டையே வாங்க கூடிய விலையில் ஒரு ஒட்டகம் விற்பனையானது ஆச்சரியமாகவே கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.