Header Ads



ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் - 26 இலட்சம் மக்கள் பட்டிணி


போரால் சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் நிலவி வரும் கொடும் பஞ்சத்தால், 26 லட்சம் பேர் வறுமை மற்றும் பசியின் பிடியில் சிக்கி அவதிப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஆப்கனின் வடபகுதியில் உள்ள 14 மாகாணங்களில் கடந்த 8 ஆண்டுகளாக கொடும் பஞ்சம் நிலவுகிறது. அந்த மாகாணங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்விடத்தைக் காலி செய்து வேறிடங்களுக்குச் செல்கின்றன.

நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் அவதியுறுகின்றனர். சாப்பாட்டுக்காக மக்கள் தங்கள் கால்நடைகளை விற்று வயிற்றுப்பாட்டை சமாளித்து வருகின்றனர்.இந்நிலையில் பனிக் காலம் நெருங்கி வருவதால் அரசு மற்றும் நிவாரண அமைப்புகள், மக்கள் பனிக் காலத்தை சமாளிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்தி வருகின்றன. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் குளிர் அடிக்கும் என்பதால், அங்குள்ள குடும்பங்கள் மிகவும் அபாயகட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


No comments

Powered by Blogger.