Header Ads



யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் - 2012 பட்ஜெட்டில் 21 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு


யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்ட செலவீனங்களுக்காக 2012 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் 21 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ் குடாநாட்டின் மூலை முடுக்கு எங்கிலும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கிற்கான நீர்வடிகாலமைப்பு முறைமை சீரானது ஆகையால் அப்பகுதிக்கான நீர்விநியோகத் தினை இலகுவாக முன்னெடுக்க முடியும். எனவே சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் இத்திட்டத்தை பூரணமாக்குவதன் மூலம் குடாநாட்டு மக்களுக்கு குழாய் மூலமான சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க முடியுமென நம்புகிறோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.