Header Ads



மஹிந்த பறந்துசெல்ல 2 பெல் ஹெலிகள் வழங்கியது அமெரிக்கா


இலங்கை விமானப்படைக்கு இரண்டு பெல்- 411 உலங்குவானூர்திகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் ரெக்ஸ்ரோன் நிறுவனம் நேற்று இவற்றை இலங்கை விமானப்படையிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைத்துள்ளது. 

ரெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ரென்னிசீ, என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைத்து இரண்டு பெல் உலங்குவானூர்திகளினதும் சாவிகளை, விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரமவிடம், பெல் நிறுவனத்தின் மூத்த உதவித் தலைவர் லறி டி றொபேட்ஸ் கையளித்தார். 

இந்த நிகழ்வில் அமெரிக்காவுக்கான இலங்கை  தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட இலங்கை  விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரம, தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு பெல்-412 உலங்குவானூர்திகள் மிகவும் நம்பமானதாகவும், திறன் மிக்கவையாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இலங்கை விமானப்படை இந்த வகை உலங்குவானூர்திகளை மிகமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்குப் பயன்படுத்தி வருகிறது. இதையடுத்து  மிகமுக்கிய பிரமுகர்களின் பயணத்துக்காகவே இந்த இரண்டு பெல்-412 உலங்குவானூர்திகளையும் விமானப்படை கொள்வனவு செய்துள்ளது. இதற்கென 2011ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக குறைநிரப்புப் பிரேரணை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.