தெற்காசியாவின் மிகவுயர்ந்த கட்டிடம் கொழும்பில் - 104 மில்லியன் டொலர் செலவு
கொழும்பு மாநகரில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் மிகவும் உயரமான கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதென தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
350 மீற்றர் உயரம் கொண்ட இந்தக் கட்டத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான உடன்படிக்கை அடுத்தவாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனூஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.
இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 104 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.லோட்டஸ் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர்மாடிக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை 26 தொடக்கம் 30 மாதங்களில் நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தின் மேற் பகுதியில் 24 அறைகள் கொண்ட ஹோட்டல் ஒன்றும் சுழலும் உணவகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக அனூஷ பெல்பிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் மிக உயர்ந்த பல்நோக்கு தொலைத்தொடர்பு கோபுரமாக இது அமையுமெனவும், இதன் நிர்மாண நடவடிக்கை அடுத்த மாதம் கொழும்பில் ஆரம்பிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Post a Comment