Header Ads



இலங்கைக்கு 100 மில்லியன் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா


நாட்டின் அறிவு சார்ந்த பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு இரண்டாம் நிலை கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் ஐக்கிய அமெரிக்கா 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.
   
இதற்கான கடனை தவணை முறையில் இலங்கைக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
   
இந்த திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் கணினி கல்வியை மேம்படுத்த திட்டம் வகுப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   
மாகாண மட்டத்தில் அமுல்படுத்தப்படும் இந்த திட்டமானது மத்திய மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஆதரவுடன் மாகாண கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.