Header Ads



சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அரபு லீக்


சிரியா மீது அராப்லீக் அமைப்பு பொருளாதார தடை விதித்தது. கடந்த 8 மாதங்களாக சிரியாவில் அதிபர் பஷர்அல்அசாத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. எனினும் சிரியா அதிபர் பதவிவிலக மறுத்து வருகிறார். ராணுவம்- பொதுமக்களிடையே நடந்து வரும் மோதலில் பலர் பலியாகி வருகிவ்ர்,

சிரியா வன்முறையால் இதுவரை 3,500 பேர் பலியாகியுள்ளனர். சர்வதேச சமூகம் வலியுறுத்தியும் அதிபர் பிடிவாதம காண்பிக்கிறார். இந்நிலையில் அராப் லீக் அமைப்பின் அவசரக்கூட்டம் எகிப்தின் கெய்ரோவில் கூடியது. , பொதுச்செயலர் துவக்கி வைத்து பேசினார். பின்னர் உறுப்புநாடான கத்தார் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அகஹமத்பின்-ஜாஸிம் கூறுகையில், 

சிரியா மீது பொருளாதார தடை விதிப்பதாகவும், சிரியாவிற்கு சொந்தமான சொத்துக்கள், முதலீடுகள் அராப் லீக் உறுப்பு நாடுகளில் இருந்தால் அவற்றை முடக்கி வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சிரியாவின் வர்த்தகரீதியாக நெருங்கிய நட்பு நாடுகள்என்று கூறப்படும் ஈராக், லெபனான் நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தது. மொத்தம் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 19 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இது குறித்து அராப்லீக் பொதுச்செயலர் நபில்-இலராபி கூறுகையில்,சிரியா தொடர்ந்து வலியுறுத்தினால் பொருளாதார தடையை விலக்குவது குறித்து பரிசீலிப்போம். ஆனால் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர சிரியா உத்தரவாதம் தர வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.