பாகிஸ்தான் வீரர்களின் ஊழல் உறுதியானது - லண்டன் நீதிமன்றம் தீர்மானித்தது
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சல்மான் பட் வேண்டுமென்றே நோ பால்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தாங்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று இந்த இருவரும் தெரிவித்தனர். பணம் வாங்கியதாக கூறப்படுவதையும் மறுத்தனர்.
ஆனால் இந்த வழக்கை விசாரித்த 12 ஜூரிக்களில் 10 பேர் சல்மான் பட் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்தார் என்ற தீர்ப்பை எட்டியுள்ளனர். அதே நேரம் முகமது ஆசிப் லஞ்சம் வாங்கியது தொடர்பான சதியில் இணைந்து இருந்தாரா என்பது குறித்து முடிவு எட்டப்படவில்லை.
ஸ்பாட் பெட்டிங்ஒரு ஆட்டத்தின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து பந்தயம் கட்டப்படுவதே ஸ்பாட் பெட்டிங் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாட் பெட்டிங் ஆட்டத்தின் முடிவு குறித்து இருக்காது. லார்ட்ஸ் போட்டியில் முன்கூட்டியே நிர்ணியிக்கப்பட்ட ஒவர்களில் நோ பால் வீசப்பட்டது என்பதே இந்த வழக்கில் அடிப்படை.
சல்மான் பட், முகமது ஆசிப் ஆகிய மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அமிர் ஆகியோர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து இயங்கும் விளையாட்டு ஏஜண்ட் மசார் மஜூத் என்ற நபருன் சேர்ந்து லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சில பகுதிகளை முன்கூட்டியே நிர்ணயித்ததாக பிரிட்டனில் இருந்து வெளியான நீயுஸ் ஆப் தி வோர்லட் பத்திரிக்கை ரகசிய கேமிரா மூலம் நடத்திய புலனாய்வில் தெரியவந்தது.
சல்மான் பட்டும், முகமது ஆசிப்பும் பேராசை காரணமாக பல லட்சம் பேர் பார்த்த போட்டிக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன் தமது அணிக்கு துரோகம் இழைத்துள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினர். இந்த வழக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஊழல் மலிந்து காணப்படுவதை இந்த வழக்கு காட்டுவதாகவும் அரச வழக்கறிஞர் அப்தாப் ஜாப்ரே தெரிவித்தார்.
Post a Comment