Header Ads



அதிவேக நெடுஞ்சாலை - விமல் வீரவன்சவுக்கு பிடிக்கவில்லையாம்


நாட்டின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம் n;தாடர்பில் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சனம் செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவரான விமல்வீரவன்ச, நெடுஞ்சாலை குறித்து வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை சுற்றாடல் காரணிகளை கருத்திற் கொள்ளாது அமைக்கப்படடுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் கெப்பட்டிபொலவின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக மற்றும் சுழலியல் காரணிகளை உதாசீனம் செய்து இந்த பாதை நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நெடுஞ்சாலை தெற்கு உறவுகளை பிளவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் மூலம் பல குடும்பங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வினைத்திறனாக இயங்காத நிறுவனங்களை தேசிய மயப்படுத்தும் சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஜே.என்.பி கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.