Header Ads



பாகிஸ்தான் - ஆப்கான் பதற்றம் தணிய துருக்கியில் பேச்சு ஆரம்பம்

பதட்டத்தை தணிக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அதிபர்கள் பேச்சு வார்த்தை துருக்கியில் தொடங்கியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல் கொய்தாகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. அவை வருகிற 2014-ம் ஆண்டு வெளியேற உள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தது. பாகிஸ்தானின் ஹக்கானிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபரும், தலைமை சமரச காதருமான புர்கானுதீன் ரப்பானி கொல்லப்பட்டார்.

இதற்கு பாகிஸ்தான் உளவுத்துறையின் சதியே காரணம் என ஆப்கானிஸ்தான் கருதுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு பாதிக்கப்பட்டு பதட்டம் நிலவுகிறது.  எனவே, அண்டை நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை தணிக்க சமரச பேச்சு வார்த்தைக்கு துருக்கி அதிபர் அப்துல்லா குல் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான பேச்சு வார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான் புல்லில் நேற்று தொடங்கியது.

அதில் பங்கேற்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப்அலி சர்தாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்காஸ் மற்றும் இரு நாட்டு ராணுவ தளபதிகள் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் இஸ்தான்புல் சென்றுள்ளனர்.பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆஷ்பாப் பர்வேஷ் கயானி, ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஷெர் முகமது கரீமி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அவர்களது பேச்சு வார்த்தை விவரம் வெளியிடப் படவில்லை. அதே நேரத்தில் பேச்சு வார்த்தை நல்லமுறையில் நடந்தது என பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில் இன்று இஸ்தான்புல்லில் உள்ள சிறப்புமிக்க ஒட்டோமான் காலத்து சிராகன் அரண்மனையில் அதிபர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை நடக்கிறது. அதில், ஆசிப் அலிசர் தாரியும், ஹமீத் சர்காயும் கலந்து கொள்கின்றனர். இப்பேச்சுவார்த்தையில், ஆசிய கண்டத்தில் உள்ள சீனா, இந்தியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகளின் தூதர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. முக்கியமாக இதில், அண்டை நாடான இந்தியா பங்கு பெற வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஹீனாரப் பானிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.