இலங்கை காலனித்துவ நாடல்ல - பிரிட்டனுக்கு பதிலடி
2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு முன்னர் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. வெளிநாடுகளை திருப்திப்படுத்தும் வகையில் எமக்கு செயற்பட முடியாது. எந்த நாடும் எமக்கு உத்தரவிட முடியாது. நாட்டு மக்களின் தேவைக்கேற்பவே சட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு குறித்து விளக்கமளிக்கும் மாநாடு வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. பிரித்தானியாவின் கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் கூறியதாவது, வேறு நாடுகளை திருப்தி படுத்துவதற்காக எமக்கு கொள்கை தயாரிக்க முடியாது. இலங்கை காலனித்துவ நாடல்ல. இது சுயாதீனமான இறைமையுள்ள நாடு. எமக்கு எந்த நாடும் உத்தர விட முடியாது. காலக்கெடு விதிக்கவும் முடியாது.
மக்களுக்கு எது நல்லதோ அதனையே நாம் மேற்கொள்வோம். வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க மாட்டோம். பிரித்தானியாவின் கருத்தை நாம் நிராகரிக்கிறோம் என்றார். பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட இருந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் அமைச்சர் இங்கு விளக்கினார்.
Post a Comment