Header Ads



எங்கள் நாட்டு பிரதமரின் ஆசை - மஹிந்தவிற்காக கவிதையும் பாடினார்


இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் மிகக் கூடுதலாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பாணின் விலை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர வேண்டும் என்றும் பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நடுத்தர வருமானம் பெறுகின்ற நாடாக எமது நாடு தற்போது முன்னேறியுள்ளது. துரிதமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். உலக வங்கியும் இதனையே கூறுகின்றது.

மக்களை என்றென்றும் கையேந்தும் நிலையில் வைத்திருக்க முடியாது. நிவாரணமும் வழங்க முடியாது. இந்த வரவு செலவுத் திட்டம் நூற்றுக்கு நூறுவீதம் மகிழ்ச்சியளிக்க கூடிய வகையில் இல்லை என்றாலும் இதுவரையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களை விட இதுவே சிறந்த வரவு செலவுத் திட்டமாகும். 

நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான விலை இன்னும் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். பாணின் விலை இன்னும் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் மக்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உள்ளூர் உற்பத்திகள் அதிகரிக்கும் என்ற தன்னுரையை நிறைவு செய்த பிரதமர் வரவுசெலவுத் திட்டத்தையும் ஜனாதிபதியின் குடும்பத்தையும் புகழ்பாடி சபையில் கவிதை படித்தார்.



No comments

Powered by Blogger.