Header Ads



ஈரான் மாணவர்கள் பிரிட்டன் தூதரகத்தை கைப்பற்றினர்


ஈரான்நாட்டு பல்கலைமாணவர்கள் இங்கி‌லாந்து அரசை கண்டித்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். ஈரான் நாடு அணுகுண்டு தயாரிப்பது குறித்து இங்கிலாந்து அரசு கருத்து ஒன்றை வெளியிட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் நாட்டு பல்கலை மாணவர்கள் ஈரான் அரசு ‌ இங்கிலாந்து நாட்டு தூதுவரை உடனடியாக நாட்டை விட்டு வெளி‌யேறச்செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான வாசகங்களை கூறியபடி பேரணியாக சென்ற பல்கலை மாணவர்கள் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் அத்துமீறி நுழைந்தனர். பி்னனர் அங்கிருந்த பாதுகாவலர்கள்மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் ‌கொடியை தீ வைத்து கொளுத்தினர். 

இதனை உள்ளூர் டி.விக்கள் ‌நேரடியாக ஒளிபரப்பு செய்ததாகவும், தூதரகத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்ததால் மாணவர்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லை என்றும் ‌ஏஜென்சி செய்திகள் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.