Header Ads



வடக்கு ஆளுநருடன் யாழ் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு


தகவல்
எம்.எம்.எம்.ரமீஸ் (சட்டத்தரணி)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் முஸ்லிம் மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட சந்திப்பொன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சீ.எம்.அமீன் தலைமையில் வடமாகாண ஆளுனரின் யாழ்பாணக் காரியாலயத்தில் 2011, நவம்பர் 28ஆம் நாள் மதியம் 2  மணியளவில் நடைபெற்றது.

மேற்படி சந்திப்பின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகள், அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் வடமாகாணத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் நீண்டகாலம் கவனம் செலுத்திவருகின்றார் என்றும், ஒரு தூர நோக்குடன் கூடிய வேலைத்திட்டத்தினை வடமாகாணத்தில் அமுல்நடாத்தி வருகின்றார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் முக்கிய பங்காளிக்கட்சியாகும்.

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4 வேட்பாளர்களை களமிறக்கியது, மக்களின் அமோக ஆதரவுடன் 4 வேட்பாளர்களும் மாநகரசபை உறுப்பினர்களாக தொரிவு செய்யப்பட்டதுடன் ஆளும் கட்சியிலும் இணைந்து மாநகரசபையின் சீரான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள், ஆட்சியில் இருக்கும் அணியினர் என்றவகையிலும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சீராக இடம்பெறவேண்டி தூர நோக்குடன் செயற்படும் அணியினர் என்ரவகையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறும் மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்களில் அதன் பங்கு முக்கியத்துவமாகின்றது. 

மேற்படி வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆளுனர், நாம் அரச நிர்வாகத்தை மேற்கொள்கின்றோம், எமக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அரச தரப்பில் இருப்போரது ஆதரவும் அத்தியாவசியமானது, நான் அறிந்தவகையில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் மீள்குடியேற்ற விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்படுகின்றார், அவரது திட்டங்களை நாம் வரவேற்கின்றோம், முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் நான் மிகுந்த அக்கறைகொண்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு பொம்மைவெளிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெறுக்கு குறித்தும், பொம்மைவெளிப் பகுதியின் மின் இணைப்புகள் குறித்தும், காணியற்றோருக்கான தீர்வுகள் குறித்தும், முஸ்லிம் கிராமசேவையாளர் நியமனம், மத ஸ்தாபனங்களுக்கான உதவித்தொகை, பட்டதாரி வேலைவாய்ப்பு விவகாரம், பொது வேலைவாய்ப்பு விவகாரம், வாழ்வாதார உதவிகளுக்கான வேலைத்திட்டம், ஹதீஜா கல்லூரியை மீளவும் இயங்கவைத்தல், ஒஸ்மானியா கல்லூரியின் கட்டிட நிர்மான விடயங்கள் என்பன இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்திப்பில் சட்டத்தரணி றமீஸ், யாழ் மாநகரசபை உறுப்பினர் முஸ்தபா, யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரும் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.