Header Ads



நெடுஞ்சாலையில் அவதானம் தேவை - முதல் விபத்தில் இருவர் காயம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது வாகன விபத்து பதிவாகியுள்ளது. 

இந்த வாகன விபத்து இன்று காலை 07.10 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கொழும்பு - காலியை ஒரு மணித்தியாலத்தில் இணைக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ என்ற இடத்தில் வான் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மிக வேகமாகச் சென்ற வான் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வானில் பயணம் செய்த இருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதிவேக நெடுஞ்சாலை இலங்கைக்கு புதிது என்பதால் அதில் பயணம் செய்யும் சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது

No comments

Powered by Blogger.