Header Ads



பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு - செவ்வாய் கிரகத்தில் மண்குன்று


அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு கிளைஸ் 581ஜி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி தொலைவில் உள்ளது. 

இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளது. எனவே அங்கு மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை சுற்றி இருப்பது போன்றே இங்கும் சந்திரன் உள்ளது. மேலும், கிளைஸ் 581ஜி கிரகத்தின் அருகே மேலும் 2 கிரகங்கள் உள்ளன. 

அவற்றை சுற்றி 6 நட்சத்திரங்கள் உள்ளன. அவை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய “கிளைஸ் 581ஜி” கிரகம் பூமியை விட 4 மடங்கு பெரியது. 11 வருட ஆராய்ச்சிக்கு பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது. என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   

அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அது எடுத்து அனுப்பியுள்ள போடடோக்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து, அமெரிக்காவின் ஜோன்ஸ் காப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி நாதன் பிரிட்ஜஸ் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் மிக பலத்த புயல் காற்று வீசுகிறது.   அதனால் அங்கு பறக்கும் மணல்கள் குன்றுகளாக உருவாகியுள்ளன. மேலும் மணலும் அலைகளாக மாறி அடுக்கடுக்காக தெரிகின்றன என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மணல் குன்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால், அவை தானாக உருவானது என கூறி வந்தனர். தற்போதுதான் அவை புயல் காற்றினால் ஏற்பட்டவை என கண்டுபிடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.