Header Ads



உலகின் மோசமான நகரம் பக்தாத் என்கிறது ஆய்வு


உலகில் உள்ள 400 நகரங்களில் உலக மட்டத்தில் வாழ்க்கைத்தராதரம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லந்து நாட்டின் மூன்று நகரங்கள் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

வர்த்தக நகராக விளங்கும் சூரிச் உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தரத்தை கொண்ட நகரங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மிகச்சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட முதலாவது நகரம் என்ற பெருமை மீண்டும் ஒஸ்ரியாவின் வியன்னா நகருக்கு கிடைத்துள்ளது.
  
 சுவிஸ் நாட்டில் சர்வதேச நகர் என அழைக்கப்படும் ஜெனிவா 8ஆவது இடத்திற்கும் சுவிஸின் தலைநகரான பேர்ன் நகரம் 9ஆவது இடங்களையும் பெற்றுள்ளன.  முதல் 25 இடங்களில் அரைவாசியை ஐரோப்பிய நகரங்கள் பெற்றுள்ளன.
  
 பக்தாத் நகரம் மிக மோசமான வாழ்க்கை தரத்தை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. சுடான் நாட்டில் உள்ள கார்ட்டூம் நகரம், ஹைட்டி நாட்டில் உள்ள போரட்-ஒ-பிரின்ஸ் நகரம், சாட் நாட்டில் உள்ள ட்ஜாமினா நகரம் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசின் பாங்குயி நகரம் ஆகியன மிக மோசமான வாழ்க்கைத்தரத்தை கொண்டவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.