Header Ads



மஹிந்த மீது தண்ணீர் போத்தல் அடி - வசமாக மாட்டிய பிரதியமைச்சர்


நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்த போது,அவரை நோக்கி தண்ணீர்ப் போத்தலை வீசியவர் ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் சரண குணவர்த்தனவே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 21ம் நாள் மகிந்த ராஜபக்ச வரவுசெலவுத்திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஐதேக உறுப்பினர்கள் “வெட்கம்“ என்று எழுதப்பட்ட அட்டையை உயர்த்தியபடி எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தின் போது ஆளும்கட்சி தரப்பில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் போத்தல் ஒன்று மகிந்த ராஜபக்சவுக்கு மிக அருகில் விழுந்தது. அதிலிருந்து தெறித்த தண்ணீர் மகிந்த ராஜபக்ச மீதும் கொட்டியது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது, சம்பவ நேரத்தில் எடுக்கப்பட்ட காணொலிப்பதிவு ஆய்வு செய்யப்பட்டது. இதன்போது எரிபொருள்துறை பிரதி அமைச்சரான சரண குணவர்த்தனவே தண்ணீர்ப்போத்தலை வீசியது தெரியவந்தது. ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி அவர் வீசியெறிந்த அந்தப் போத்தல் குறிதவறி மகிந்த ராஜபக்சவுக்கு அருகில் போய் விழுந்தது. 

அது மகிந்த ராஜபக்சவின் மீது விழாது போனாலும், அதிலிருந்த தெறிந்த தண்ணீர் அவர் மீது கொட்டியது. 

இதையடுத்தே, பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன ஒரு வாரகாலத்துக்கு நாடாளுமன்றத்துக்குள்  நுழைவதற்கு தடை விதித்துள்ளார்  சபாநாயகர் சமல் ராஜபக்ச.

No comments

Powered by Blogger.