Header Ads



யாழ்ப்பாணத்தில் வாக்காளர் எண்ணிக்கை மேலும் குறைவடைகிறது

யாழ். மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 24 ஆயிரத்து 716 பேரினால் மேலும் குறைவடையவுள்ளது. தற்போது முதற்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பெயர்ப் பட்டியலின் பிரகாரம் 16 ஆயிரத்து 999 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் 41ஆயிரத்து 715 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனடிப்படையில் "பிசி' படிவங்கள் விநியோகிக்கப்பட்டு அதனூடாகப் பெறப்பட்ட பதிவின் அடிப்படையில் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியலிலேயே 24 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகர தேர்தல் தொகுதியில் 5 ஆயிரத்து 412 பேர் நீக்கப்பட்டு ஆயிரத்து 774 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 5ஆயிரத்து 15 பேர் நீக்கப்பட்டு 2 ஆயிரத்து  332 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் 2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் 4 இலட்சத்து 84 ஆயிரத்து 791 பேராகக் காணப்பட்ட எண்ணிக்கை தற்போது 4 இலட்சத்து 60 ஆயிரத்து 75 பேராகக் குறைந்துள்ளது.இதில் தேர்தல் ஆணையாளரால் வடக்கு , கிழக்குக்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட படிவத்தில் ஊடாக விண்ணப்பத்தவர்களதோ, உரிமை கோரி படிவத்தினூடாக விண்ணப்பித்த பதிவுகளோ உள்ளடக்கப்படவில்லை. அவை அனைத்தும் இறுதி வாக்காளர் பெயர்ப்பட்டயலிலேயே வெளியிடப்படும்.

இன்று முதல் காட்சிப்படுத்தப்படும் இந்த எ , பி பட்டியலில் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் சமர்ப்பிக்கமுடியும். அத்துடன் எதிர்வரும் நவம்பர் 31ஆம் திகதி வரை வாக்காளர்களைப் பதிவதற்குரியவர்கள் பதிவு செய்துகொள்ளவும்முடியும்.                                                              

No comments

Powered by Blogger.