Header Ads



மாணவர்கள் உலக வங்கிக்கு அடகு வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு



உலக வங்கியின் 60 கோடி ரூபாவிற்காக இந்நாட்டு மாணவ சமூகத்தை அரசு அடமானம் வைத்துள்ளது. சுதந்திரக் கல்வியை வியாபார பொருளாக்கியமையால் வருடமொன்றுக்கு 50 பாடசாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சோஷலிச மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றிய மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நளின் ஜயதிஸ்ஸ கூறுகையில், 

அடுத்தாண்டு மாணவர் போராட்டம் மிக்க ஆண்டாகவே அமைய போகின்றது. தேசிய சுதந்திரக் கல்வியை மோசடி செய்து மாணவ சமூகத்தின் வாழ்வை சீரழிப்பது மட்டுமன்றி நாட்டுக்கு தீரா சாபத்தையும் அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது.

எனவே நாட்டின் சுதந்திர கல்வியை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். உயிர்களைத் தியாகம் செய்தேனும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.