Header Ads



மொரோக்வோவின் பிரதமராக இஹ்வான் சார்பானவர் நியமனம்


மொரோக்கோ மன்னர் முஹம்மத், நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் செயலாளர் நாயகம் அப்துல் இலாஹ் பின்கிரானை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

ஏனைய கட்சிகளுடன் இணைந்து அவர் கூட்டரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளார். இறுதித் தேர்தல் முடிவுகளின்படி, நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 395 அங்கத்தவர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 107 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.

அறபுலகில் ஏற்பட்ட புரட்சியின் அலைகள் மொரோக்கோவில் ஊடுருவாமல் இருக்க, மன்னர் முஹம்மத் புதிய சீர்திருத்தங்களை அறிவித்திருந்தார். அதன் விளைவாக தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டது.

பழைய முறையின்படி மன்னர் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்க முடியும். ஆனால், புதிய திருத்தங்களின் பிரகாரம், அதிக ஆசனங்களைப் பெறும் பிரதான கட்சியிலிருந்தே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலேயே அப்துல் இலாஹ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூனிஸியாவில் ஹமாதி ஜபாலி பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், இரண்டாவதாக பிரதமராக நியமிக்கப்படும் இஸ்லாமியவாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.