சர்வதேச இலங்கை தபால் கட்டணம் அதிகரித்தது
சர்வதேச தபால் சேவைகளுக்கான கட்டணம் இன்று செவ்வாய்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சர்வதேச தபாலின் ஊடாக அனுபப்படும் பொதிகளின் எடைக்கேற்ப கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் ஆர்.டி.சி.காமினி தெரிவித்தார்.
இது தொடர்பில் அனைத்து தபால் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.முன்னர் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த நாடுகள் தற்போது மக்களின் நன்மைகருதி எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டுத் தபால்கள் இதுவரை காலமும் 10 கிராம் எடைக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது, திருத்தங்கள் மேற்கொண்டதன் பின்னர் தற்போது 20 கிராம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment