இலங்கையின் பணவீக்கம் சரிவு
கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம், மேலும் சரிவு கண்டுள்ளதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரத் தினைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் ஆண்டுக்காண்டு மாற்ற விகிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் இலங்கையின் பணவீக்கம், சென்ற ஒக்டோபர் மாதத்தில் ஐந்து புள்ளி ஒரு சதவீதம் என வீக்கம் கண்டுள்ளது.
இதுவே முன்னைய மாதத்தில் (செப்தொம்பர்) ஆறு புள்ளி நான்கு சதவீதம் என உயர்வாக வீக்கமடைந்து காணப்பட்டதுடன் இலங்கையின் பணவீக்கம், கடந்த யூன் மாதத்தில் இருந்து வீழ்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம, மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அரிசி மற்றும் மரக்கறிகளின் விலைகளுடன் எரி பொருட்களின் விலைகளும் இந்த மாதத்தில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment