Header Ads



முஸ்லிம் நாடுகள் நம்பிக்கையீனத்தை குறைக்கவேண்டும் - துருக்கி உபதேசம்

தமது நாட்டில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தமக்கிடையிலான நம்பிக்கையீனத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது.

ஒத்துழைப்புகளுக்கான புதிய காலப் பகுதியை இரண்டு அயல் நாடுகளும் ஆரம்பிக்க வேண்டும் என துருக்கி விரும்புவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. நாட்டிலுள்ள ஆயுததாரிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக இரண்டு நாடுகளும் பரஸ்பர குற்றஞ்சாட்டியுள்ளதால் இரு தரப்பு உறவுகள் பாதிப்படைந்துள்ளன.

தலிபான் மற்றும் அதன் வலையமைப்பான ஹக்கானி ஆயுததாரிகளுக்கு பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ். ஐ உதவிகளை வழங்குவதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.