Header Ads



பல்டி அடிக்க தயார்


அரசாங்கம் சமர்பித்துள்ள 2012ம் ஆண்டுக்கான வரவு செலவும் திட்டத்திற்கு தான் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு சற்று முன்னர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். 

இன்று புதன்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இலங்கையின் கல்வி, மற்றும் மாணவர்கள் வளர்ச்சி கருதியே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

பெரும்பாலும் மொஹான் லால் கிரேரு அரசு பக்கம் தாவுவார் என தெரிவிக்கப்படுகிறது. இன்று பாராளுமன்றத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனும்  மொஹான் லால் கிரேரு முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டதாக அறியவருகிறது.

No comments

Powered by Blogger.