Header Ads



ஐந்து பாடப் பிரிவுகளுடன் இம்முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் Z ஸ்கோர் வெட்டுப்புள்ளி ஐந்து  பாடப் பிரிவுகளின் கீழ் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளின் பெறுபேறுகள் அடிப்படையிலேயே உயர்தர மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் இவ் ஆண்டில் இருந்து புதிய பாட விதானத்தின் அடிப்படையில் மற்றுமொரு புதிய பாடப்பிரிவு அறிவிக்கப்பட்டு ஐந்து பாடப்பிரிவுகளின் கீழ் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படவுள்ளது. இதன் படி பொதுப் பாடப் பிரிவு என்ற புதிய பாடப்பிரிவுடன் இம் முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளன.

2008ம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பாட விதானம் தொடர்பான சுற்று நிறுபத்தின் அடிப்படையில் இந்தப் பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் புதிய பாட விதானத்தின் கீழ் இலங்கை முழுவதிலும் இருந்து ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments

Powered by Blogger.