Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களை ஏமாற்றும் முஸ்லிம் காங்கிரஸ்..!


அப்துல்லாஹ்

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டேயிருப்பான் - முதுமொழி

அதற்கமைய அண்மையில் நீதியமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து சிறுவர் நிதிமன்றமொன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. அங்கு விஜயம் செய்த அமைச்சர் தனது கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொஸானையும் மற்றும் சிலரையும் சந்தித்து பேசியுள்ளார். இதன் போது முக்கியமான விடயங்கள் எதுவும் ஆராயப்பட்டதாக தெரியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இன்று முஸ்லிம்களின் பல பொதுச் சொத்துகள் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன. மத்ரஸா பாடசலை ஹதீஜா பாடசாலை சின்ன ஹதீஜா பாடசாலை மஸ்ரஉத் தீன் பாடசாலை மத்ரஸா பொது சேவைக்கட்டிடம் என்பன கைவிடப்பட்ட நிலையிலுள்ளன. ஏற்கனவே அபூபக்கர் வீதி தைக்காப் பள்ளி இடித்தழிக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டு சமூக நலன்விரும்பிகளால் அது மீளப் பெறப்பட்டது குறிப்பிடத் தக்கது. தற்போது யாழிலுள்ள பள்ளிவாசலொன்றை  முன்னாள் இஸ்லாமிய இயக்கமொன்றின் தலைவர் ஏதோவொரு தேவைக்காக அடைய முற்படுவதாக வதந்தி உலாவுகின்றது. இவர் ஏற்கனவே இன்னொருவர் காணியில் கட்டிய பயிற்சிமன்றக் கட்டிடம் பறிபோய்விட்டது. அதனால் குறித்த பள்ளியை கைபற்ற முயற்சிக்கிறார் என மக்கள் நினைக்கின்றனர். மேலும் யாழ்ப்பாணத்தில் ஐதுறூஸ் மகாம் பள்ளிவாசல் இன்னமும் திருத்தப்படாமல் உள்ளது.

மேற்படி அழிவடைந்த நிலையிலுள்ள ஏதாவது ஒரு கட்டிடத்தையோ அல்லது எலடலாவற்றையுமோ முஸ்லிம்காங்கிரஸின் தலைவர் திருத்தித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும். ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் தான் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைக்கும் ஏராவுர் படுகொலைக்கும் மற்றும் பல படுகொலைகளுக்கும் காரணமாக அமைந்தது. மேலும் வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸே பொறுப்புக் கூறவேண்டிய நிலையிலுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் யாழ் முஸ்லிம்களை சந்தித்து அவர்களது புனர்வாழ்வுக்கு உதவுவது பற்றி பேசாமல் ஒருவரை இடம்மாற்றுவது குறித்து மட்டும் பேசிவிட்டு வந்திருப்பது யாழ் முஸ்லிம்களை அக்கட்சி தொடர்ந்தும் மாங்காய்களாக கருதி ஏமாற்ற நினைப்பது புரிகிறது.

ரவுப் ஹக்கீம் மட்டுமன்றி அக்கட்சியின் ஏனைய உறுப்பினர்களான பசீர் சேகுதாவுத் ஹஸன் அலி போன்றவர்களும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதையும் செய்ய முன்வரவில்லை. இவர்களின் வீரப்பேச்சுக்களாலும் வாய்ச்சொல் வீராப்புகளாலும் அழிவடைந்த பள்ளிவாசல்களுக்கு கூட ஒரு பக்கட் சீமெந்தை வழங்க முடியாத அளவுக்கு காங்கிரஸாரின் மனது இறுகியுள்ளது புரிகிறது.

முஸ்லிம் காங்கிரஸை நம்பி ஏமாந்தது போதும் யாழ் முஸ்லிம் சமூகமே!
வாழ்க முஸ்லிம் காங்கிரஸ்! வளர்க பிரதேசவாதம்.


No comments

Powered by Blogger.