Header Ads



ஜிஹாத்தில் ஈடுபட பாகிஸ்தானியர் ஆர்வமாக உள்ளனராம்


மும்பைத் தாக்குதலோடு தொடர்புடைய, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாத் உத் தவா, பாகிஸ்தானை முழுமையான தலிபான் தேசமாக மாற்றப் போவதாகவும், அமெரிக்காவுக்கு எதிராக இளைஞர்களைத் திரட்டி, ஜிகாத்தில் ஈடுபடுத்தப் போவதாகவும் கூறியுள்ளது.

பாக்., எல்லைச் சாவடி மீதான நேட்டோ தாக்குதலை எதிர்த்து, லாகூரில் நேற்று நடந்த ஜமாத் உத் தவா சார்பிலான பேரணியில் பேசிய அதன் மூத்த தலைவர் அமீர் ஹம்சா கூறியதாவது: பாக்., ராணுவத்துக்கு, எங்களது ஆதரவு உண்டு. ஜமாத் தனது தொண்டர்களை தலிபான்களாக மாற்றும். பஞ்சாப் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள், பைசலாபாத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகம் என, எல்லாவற்றிலும் தலிபான்கள் இருப்பர். ஷாம்சி ராணுவ தளத்தில் இருந்து மட்டுமல்லாமல், ஷாபாஸ் ராணுவ தளத்தில் இருந்தும், அமெரிக்காவை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு, ஹம்சா பேசினார்.

மற்றொரு தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கி பேசுகையில், "ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை, விரைவில் கொல்வோம். அமெரிக்காவை அரசு பழிவாங்கவில்லை என்றால், நாங்கள் அதைச் செய்வோம்' என்றார். ஐ.எஸ்.ஐ., முன்னாள் தலைவர் ஹமீத் குல்லின் மகன் அப்துல்லா குல் பேசுகையில், "ஜிகாத்தில் பங்கேற்க, பாக்., மக்கள் ஆர்வமாக உள்ளனர்' என்றார்.

No comments

Powered by Blogger.