Header Ads



குவைத்தில் அரசியல் சிக்கல்


வளைகுடா நாடான குவைத் நாட்டின் பிரதமராக ஷேக்-நஸீர் குவைத் மன்னர் ஷேக்-ஷபா சிபாரிசால் 2006-ம் ஆண்டு பிரதமர் ஆனார். அன்று முதல் குவைத் அரசியலில் சிக்கல்கள் இருந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்நிலையில், பிரதமர் ஷேக்-நஸீர் அரசுப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ளதாக எதிர் கட்சி அமைச்சர்கள் ஊழல் புகார் தெரிவித்து நேற்று பேரணி நடத்தினர். 

இதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலை சமாளிக்க மன்னர் ஷேக்-ஷபா உயரதிகாரிகளுடன் ஆலோசித்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக்-நஸீர் உடனடியாக விலகுமாறும், அமைச்சரவையை கலைக்குமாறும் உத்தரவிட்டார். 

மன்னரின் உத்தரவின் பேரில் ஷேக்-நஸீர் தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. புதிய அரசு தேர்ந்தெடுக்கப்படும் வரை ஷேக்-நஸீர் பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

No comments

Powered by Blogger.