Header Ads



ரவூப் ஹக்கீமை சந்திக்கிறார் யசூசி அகாசி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக் கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஆளும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யசூசி அகாசிக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு நாளை முற்பகல் 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூவ் ஹக்கீமின் கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவிருப்பதாக ஜப்பானியத் தூதரக வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இவருடனான சந்திப்பில் இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட பல் வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரை யாடவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார். இலங்கையில் அமைக்கப்பட்டி ருக்கும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை திறப்புவிழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு ஐப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை வந்துள்ளார்.

இவர் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸை இன்றையதினம் சந்திக்க வுள்ளார். இதுமாத்திரமன்றி ஆளும், எதிர்க்கட்சிப் பிரமுகர்களையும் இவர் சந்தித்துப் பேச்சுவார்

No comments

Powered by Blogger.