ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பின் நிதி நிறுத்தம் - இலங்கையை எச்சரிக்கிறது பிரிட்டன்
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக செயற்படும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிர்காலத்தில் உதவிகளை வழங்கப் போவதில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. ஓரினச் சேர்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை ரத்து செய்ய நேரிடும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட போது சில நாட்டுத் தலைவர்களிடம் தாம் இதனை வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளில் 41 நாடுகள் ஓரினச் சேர்க்கையை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஓரினச் சேர்க்கைக்கு எதிராக சட்டங்கள் காணப்படும் நாடுகளில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்இ அவ்வாறு சட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் உதவிகளை நிறுத்த நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே பிரித்தானிய உதவிகளை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்பதனை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பிரித்தானிய வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படும் பொதுவான உதவி நிதி குறைக்கப்படுமே தவிர வேறும் உதவிகள் ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டத்தில் ஐந்து வீதமான நிதி நாடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உதவிகளைப் பெற்றுக் கொள்ள வறுமை ஒழிப்பு மனித உரிமை பாதுகாப்பு நல்லாட்சி குற்றச் செயல்களுக்கு உள்நாட்டு ரீதியான தண்டனை வழங்கும் பொறிமுறை போன்ற நிபந்தனைகளுக்கு உட்படும் நாடுகளுக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்படுகிறது.
Post a Comment