Header Ads



யாழ்ப்பாண அபிவிருத்தி திட்டங்கள் - அமெரிக்க அதிகாரிகள் விசாரணை


யாழ். மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு சரியான முறையில் கிடைக்கிறதா? எனவும் யாழின் தற்போதைய நிலையில் மீளக்குடியேறிய மக்களின் வாழ்வாதார முயற்சிக்கு அரசின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பாகவும் இலங்கையின் அமெரிக்க துதரக அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். 

இன்று புதன்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு சென்ற தூதரக அதிகாரிகள் யாழ். அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

யாழில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி, கல்வித்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கண்ணிவெடி அகற்றல் தொடர்பாக ஆராய்ந்ததாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். 

மேலும் மக்களின் வாழ்வியல் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிகைகள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க துணைத்தூதுவர் கேத்ரீன் வொன்டி, அவரது உதவியளார் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.