தமிழர் உயிர்களை காப்பாற்றிய மஹிந்தவிற்கு கோயில்கட்டி கும்பிட வேண்டும்
மகிந்த ராசபக்சவுக்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் கோவில் கட்டி கும்பிட வேண்டும். புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் வடக்கு கிழக்கில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களும் பலகோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டிருக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மட்டக்களப்பு ஆரையம்பதியில் நடந்த வைபவம் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எனவே தமிழ் பிரதேசம் எங்கும் கோவில் கட்டி கும்பிட வேண்டும் என பிள்ளையான் தெரிவித்தார். மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச மக்களின் தேவைகளை கண்டறியும் விசேட செயலமர்வு ஆரையம்பதி பிரதேசசபை மண்டபத்தில் அதன் தலைவர் திருமதி.மேரி கிருஷ்டினா தலைமையில் நடைபெற்றபோதே பிள்ளையான் இதனைத்தெரிவித்தார்.
Post a Comment