Header Ads



இஸ்ரேலியனை கைதுசெய்தால் பலஸ்தீனியருக்கு மில்லியன் டொலர் சன்மானம்


இஸ்ரேலிய இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்யும் பலஸ்தீனியர் ஒருவருக்கு ஒரு மில்லியன் டொலர்களை சன்மானமாக வழங்கப்போவதாக சவூதி இளவரசர் காலித் பின் தலால் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவரை கடத்திக்கொண்டு அல்லது கைதுசெய்துகொண்டுவரும் பலஸ்தீனர் ஒருவருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்கப்போவதாக சவூதியைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான கலாநிதி அவழ் அல் கர்னீ தெரிவித்திருந்தார்.

கலாநிதி கர்னீயின் இந்த அறிவிப்பை அடுத்து அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்த இஸ்ரேல் தரப்பு, கர்னீயை கொலை செய்பவருக்கு ஒரு மில்லியன் டொலர்களை சன்மானமாக வழங்கப்போவதாகவும் அறிவித்திருந்தது.

இஸ்ரேலிய சிப்பாய் ஒருவருக்குப் பதிலாக ஒரு இலட்சம் டொலர்களை சன்மானமாக கலாநிதி கர்னீ அறிவித்திருந்த நிலையில், எஞ்சிய 900,000 டொலர்களை தான் வழங்கப்போவதாக சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்வலீத் பின் தலாலின் சகோதரரான இளவரசர் காலித் பின் தலால் அறிவித்துள்ளார்.

"ஒரு இஸ்ரேலிய சிப்பாய்க்குப் பதிலாக 100,000 டொலர்களை சன்மானமாக வழங்குவதாகவே கலாநிதி கர்னீ தெரிவித்திருந்தார். அவர்களோ அவரது உயிருக்கு பத்து இலட்சம் டொலர்களை சன்மானமாக வழங்கப்போவதாகத் அறிவித்துள்ளனர். நான் கலாநிதி அவழ் அல் கர்னிக்கு சொல்கிறேன் நான் உங்களுக்கு ஆதரவாகவே உள்ளேன். எஞ்சிய 900,000 டொலர்களை நான் வழங்கத் தயாராகவுள்ளேன்" என இளவரசர் காலித் "தலீல்" என்ற தொலைக்காட்சி சேவையிடம் தெரிவித்துள்ளார். இது எஞ்சியுள்ள பலஸ்தீனர்களையும் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்க உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் ஹமாஸ் செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையைத் தொடர்ந்து கிலாட் ஷலிற்‌ என்ற ஒரு இஸ்ரேலிய சிப்பாய்க்குப் பதிலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விடுவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.