Header Ads



பேஸ்புக்கில் 4 விதவைப் பெண்களை ஏமாற்றியவர்


4 விதவைப் பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி இருக்கிறார் ஒருவர். இவருக்கு வயது 45 . இவரது பெயர் Shaun Richings. இவர் பேஸ்புக்கில் ஏமாற்றியது விதவைப் பெண்களை மாத்திரம்தான்தான்.

முதலாவதாக 58 வயதான Hazel Wickings என்ற விதவைப் பெண்ணுக்கே வலை விரித்து ஆறு ஆண்டுகளாக ஏமாற்றி வாழ்ந்து வந்துள்ளார். இரண்டாவதாக Tina Balne என்ற 45 வயது விதவைப் பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அதன் பின்னர் Tracie Clarke என்ற 42 வயதுப் பெண்ணுடன் இரண்டு வருடங்களாக உறவு வைத்துக் கொண்டுள்ளார். அடுத்து 38 வயதான Denise Draper என்ற பேனுடன் கடந்த நான்கு மாதங்களாக உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இறுதியாக நான்கு பெண்களிடமும் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். ஏமாற்றப்பட்ட மூன்று பெண்கள் சேர்ந்து இவருக்கு எதிராக பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அதில் ஏமாற்றுக் காரன், பொம்பிளைப் பொறுக்கி என்று எல்லாம் விபரித்துள்ளார்கள். 

No comments

Powered by Blogger.