Header Ads



அமெரிக்காவில் பனிப்புயல் - 28 இலட்சம் மக்கள் அவதி, 8 பேர் பலி

அமெரிக்காவில் அக்டோபர் மாதம் பனி காலமாகும். இந்த ஆண்டு அங்கு கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நியூயார்க், நியூமெர்சி, வெஸ்ட் மில் போர்டு, மாசாசூசெட், ஜாப்பிரி, நியூஹாம்ப்ஷியர், கனெக்டிக் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் அப்பகுதிகளில் வாழும் 28 லட்சம் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடும் பனிப்புயல் வீசுவதால் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரோடுகள், தண்டவாளங்கள் பனிகட்டியால் மூடப்பட்டுள்ளது. வாகனங்கள், ரெயில்கள் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குளிர் காற்று வீசுவதால் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். கனெக்டிகட், நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன. பனிப்புயலுக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.

No comments

Powered by Blogger.