Header Ads



க.பொ.த. சாதாரணதர பரீட்சை 12 ஆம் திகதி - 550000 ஆயிரம் பேர் தோற்றுவர்



டிசம்பர் 12 ம் திகதி நடைபெறவுள்ள 2012ம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3600 பரீட்சை நிலையங்களில் 5 இலச்சத்து 50 ஆயிரம் பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். 


எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாவுள்ள பரீட்சை டிசம்பர் 21ம் திகதி நிறைவு பெறுமெனவும் இதில் 3 இலச்சத்து 10 ஆயிரம் பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும் பரீட்சைக்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வவுனியாவில் விசேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் அங்கவீனர்களுக்காகவும், சிறைக்கைதிகளுக்காகவும் கொழும்பில் விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். 

விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளுக்காக 52 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இப்பணிகள் டிசம்பர் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒர வாரகாலத்துக்குள் நிறைவுபெறுமெனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பரீட்சை வரலாற்றில் முதற்தடவையாக கிளிநொச்சி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் நிலையம் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.