Header Ads



அரபு நாடுகளில் புதிய இராணுவ தளங்களை அமைக்க அமெரிக்க தீர்மானம்

ஈராக்கில் இருந்து வெளியேறியதும் வளைகுடா நாடுகளில் ராணுவ முகாம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் ஈராக்கில் முகாமிட்டுள்ளது. தற்போது அங்கு ஓரளவு அமைதி திரும்பியதை தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அங்கிருந்து முற்றிலும் வாபஸ் பெறப்பட உள்ளது. இதை அமெரிக்க அதிபர் ஓபாமா சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கிடையே, ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் பட்சத்தில் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், பக்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் ஆகிய நாடுகளில் ராணுவ முகாம்களை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இங்கு ராணுவ ரோந்து கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. அவை தவிர குவைத்தில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்காக குவைத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பதில் கூடிய விரைவில் தெரிய வரும்.

No comments

Powered by Blogger.