எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!
யாழ் முஸ்லிம் வலைத்தளம் ஆரம்பித்து இன்று ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர், 30 ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைகிறது. எமக்கு ஆக்கபூர்வ விமர்சனங்களை தெரிவித்து ஊக்கப்படுத்திய அத்தனை உள்ளங்களுக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.
முஸ்லிம் சமூகத்தின் கண்ணாடியாக யாழ் முஸ்லிம் வலைத்தளம் தொடர்ந்து செயற்பட உறுதிகொண்டுள்ளது. எவருக்கும் வெள்ளையடிக்காத, எவருக்கும் சாயம் பூசாத எமது நேர்மையான பயணம் தொடர அனைத்து உள்ளங்களினதும் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
சிறந்த ஊடக நெறிகளை கடைபிடித்து, முஸ்லிம் உம்மத்தை முதன்மைப்படுத்தும் எமது செயற்பாட்டை வெறுமனே தகவல்களை பதிவிடுவதுடன் மாத்திரம் இடைநிறுத்திவிடாது, முஸ்லிம் சமூகம் சார்ந்த குரலாகவும், முஸ்லிம் சமூகத்தின் பாதிப்புகளை அம்பலப்படுத்தவும் அல்லாஹ்வின் உதவியுடன் தொடர்ந்து முயலுவோம் என்பதையும் இங்கு பிரகடனப்படுத்துகிறோம்.
நிறுவனர்
யாழ் முஸ்லிம் வலைத்தளம்
யாழ் முஸ்லிம் வலைத்தளம்
Post a Comment