துருக்கி நிலநடுக்கம் - இரு நாட்களின் பின் இரண்டு வார குழந்தை உயிருடன் மீட்பு
துருக்கியின் கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 தசம் 2 ரிக்டர் அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரத்து 100 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் அனர்த்த மற்றும் அவசர நிலைமைகள் தொடர்பாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், பிறந்து இரண்டு வாரங்களே ஆன குழந்தையொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் காரணமாக வீடுகளை இழந்த வான் மற்றும் ஏஸிசிஸ் பகுதியை சேர்ந்த பலர் கடும் குளிருக்கு மத்தியில் கூடாரங்களில் உறங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்ட தென்கிழக்கு பிராந்தியத்திலுள்ள வான் மாகாணத்தில் இரண்டாயிரத்து 200 க்கும் மேற்பட்ட கட்டங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதாக துருக்கி அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வான் மற்றும் ஏசிஸிச் ஆகிய பகுதிகள் மற்றும் அதனை அண்டிய கிராமங்களிலுள்ள மக்களுக்காக மேலும் 12 ஆயிரம் கூடாரங்களை துருக்கி அரசாங்கம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் மற்றும் எதிர்கட்சி அரசியல் வாதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Post a Comment