இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்களின் குரல் - ரஹீம் ராஜி
உலகில் முஸ்லீம்கள் அதிகமாக இருந்த போதும் தேவையான துறைகளில் ஆதிக்கம் செலுத்தமையால்தான் கண்ட இடங்களில் கண்டவர்களால் உலகளாவிய ரீதியில் வேட்டையாடப்படுவதற்கான காரணங்களில் ஓன்று. உலகில் பணக்காரர்கள் முஸ்லீம்கள்.ஆனால் பேர் சொல்லக்கூடிய பெரிய நிறுவனம் ஒன்றும் முஸ்லீம்களிடம் இல்லை.உலகில் ஐந்தில் ஒருபகுதி சனத்தொகை கொண்ட நமக்கு என்று அண்மைக்காலம் வரை பேர் சொல்லக்கூடிய சர்வதேச ஊடகம் ஒன்றும் இருந்திருக்கவில்லை.
நானும் நீங்களும் அறிந்தது போல யூதர்கள் உலகை ஆட்டிப்படைப்பதற்குரிய காரணங்களில் ஓன்று சர்வதேச ரீதியாக ஊடகங்கள் அவர்கள் வசம் உள்ளமைதான்.செய்தி ஊடகங்களின் முக்கியத்துவம் முஸ்லீம்களால் இன்னமும் உணரப்படாதமை மிகவும் கவலைக்குரிய விடயம். 'தம்பி இவளோ படிச்சுபோட்டு வேற வேலை இல்லாமலா பேப்பர்ல வேலைக்கு சேர்ந்தீங்க' என்பது அண்மையில் சமூக தலைவர்களில் ஒருவர் என்று தான்னைத்தனே அழைத்துக்கொள்ளும் ஒருவர் கேட்டது ஞாபகம் வருகின்றது.
தமது குழந்தை டாக்டராக, எஞ்சினியராக, பிரபலமான ஒரு புள்ளியாக ஆக்குவதற்கு எண்ணும் ஒவ்வொரு பெற்றோரும் அந்த வரிசையில் ஊடகவியலாளன் என்ற இலட்சியத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் .சமூகத்தை மாற்றி அதன் போக்குகளை சீரமைத்து அல்லது சீரழித்து கொள்ளக்கூடிய சக்தி ஊடகங்களுக்கு உள்ளது.
அந்த வகையில் இனச்சுத்திகரிப்புக்கு ஆளான ஒரு சமூகமான யாழ்ப்பாண முஸ்லீம்களின் குரலாக உருவாகியுள்ள யாழ் முஸ்லீம் வெப் தளம் சிறந்த வகையில் நடத்தப்பட்டு வருகின்றது. ஊடகத்துறையில் திறமையும் அனுபவமும் கொண்ட அன்சீரின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டும். தனித்துவம் வாய்ந்த ஒரு சிறந்த பத்திரிகையாளனின் தூய நோக்கத்துக்கு கை கொடுப்பதை விட்டு விட்டு இதற்குள் சமூக அரசியல் செய்வது நல்லதல்ல.
ஊடகம் நடத்துவது என்பது எவ்வளவு கடினமானது என்பது ஊடகவியலாளன் என்ற வகையில் நேரடியாக கண்டறிந்த விடயம். அந்த பாதையில் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். பல சவால்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும். பலரின் வயிற்று எரிச்சல்களை அள்ளிக்கொட வேண்டியிருக்கும். வேண்டுமென்றே மோசமான விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். முதுகுக்கு பின்னால் பல சதித்திட்டங்களை நேர்கொள்ள வேண்டியிருக்கும் அந்த வகையில் தனித்து நின்று தனித்துவவமாக வெப்தளம் நடத்தும் இந்த முயற்ச்சியை நிச்சயமாக ஒவ்வொரு யாழ்ப்பாண முஸ்லீமும்,இலங்கை முஸ்லீமும் பாராட்ட வேண்டும்.இந்த முயற்சி இலங்கையின் ஒவ்வொரு ஊரில் உள்ள சிந்திக்கத்தெரிந்த முஸ்லீம்களையும்,வெப்தளங்கள் உருவாக்க தூண்டும்.
யாழ் முஸ்லீம் வெப் தளத்தின் சில செய்திகள் தனித்துவமானதாக இருப்பதையும்,வேறு சில ஊடகங்களால் மேற்கோள்காட்டி பிரசுரிக்கப்பட்டிருப்பதும் அண்மைக்காலத்தில் அவதானிக்கப்பட்டு வந்த உண்மை. சில தகவல்கள் சுடச்சுட வருவது இந்த வெப்தளத்தை நடத்தும் ஆசிரியரின் செய்தி ஆர்வத்தையும்,செய்திகளை தொடரும் தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.
சில வேளைகளில் சகோதரர் அன்ஸிர் எனது மாத்ரு பூமியில் அவதரித்த உடன் பிறவா சகோதரர் என்பதை நினைக்க பெருமையாகையும் உள்ளது.அவரின் முயற்சி தோடர வேண்டும்.யாழ் முஸ்லீம் வெப் தளம் தொடர வேண்டும்.காலப்போக்கில் எந்த சூழ்நிலையிலும் இடைநிறுத்தப்படக் கூடாது.இதற்காக என்னால் ஆன பங்களிப்பு பத்திரிகையாளன் என்ற வகையில் எப்போதும் இருக்கும்.
இந்த வெப்தளம் தொடர்ந்து செல்ல தமக்கிடையே உள்ள அரசியல்,அமைப்பு,கட்சி பேதங்களை மறந்து யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஒவ்வொரு முஸ்லீமும் பங்களிப்புசெய்ய வேண்டும் .இது அரசியல் படுத்தப்படக்கூடாது.
இந்த வெப் தளத்தின் செய்திகள் தரமானதாக இருந்த போதும்,அதன் அமைப்பு காலத்துக்கு ஏற்றது போன்று மாற்றப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. தனியே செய்திகளோடு மட்டும் நிற்காமல் இஸ்லாமிய விடயங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,சிறுவர்,பெண்கள் பகுதிகள் என்று பரவலாக்கப்படும் போது பல்சுவை உடையதாக இருப்பதுடன் பல தரப்பட்ட மக்கள் வாசகர்களாக இருப்பார்கள்.ஆங்கில மொழி மூலமாக யாழ் முஸ்லீம்களின் விடயங்கள் மொழி பெயர்க்கப்பட்டு செய்தியாக கொண்டு வரப்பட்டால் நமது பிரச்சனை சர்வதேச ரீதியாக கொண்டு வரப்படலாம். இவை எனது தாழ்மையான கருத்து.
இந்த வெப் தளத்தின் செய்திகள் தரமானதாக இருந்த போதும்,அதன் அமைப்பு காலத்துக்கு ஏற்றது போன்று மாற்றப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. தனியே செய்திகளோடு மட்டும் நிற்காமல் இஸ்லாமிய விடயங்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,சிறுவர்,பெண்கள் பகுதிகள் என்று பரவலாக்கப்படும் போது பல்சுவை உடையதாக இருப்பதுடன் பல தரப்பட்ட மக்கள் வாசகர்களாக இருப்பார்கள்.ஆங்கில மொழி மூலமாக யாழ் முஸ்லீம்களின் விடயங்கள் மொழி பெயர்க்கப்பட்டு செய்தியாக கொண்டு வரப்பட்டால் நமது பிரச்சனை சர்வதேச ரீதியாக கொண்டு வரப்படலாம். இவை எனது தாழ்மையான கருத்து.
ஆக மொத்தத்தில் இந்த வெப்தளம் சிறந்த ஒரு முயற்சியும் அத்தியாவசியமானதும்,காலத்தின் தேவையுமாகும். இது தொடர்ந்து நடத்தப்பட எனது வாழ்த்துக்கள்.
Post a Comment