Header Ads



கடாபியின் நம்பிக்கையும், தவறான கணிப்பும் - பாதுகாவலர் விளக்குகிறார்

லிபியாவில் அண்மையில் மரணமான முன்னாள் அதிபர் மம்மர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார்.

தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் கடாபி என்றார் அவர்.

லிபியாவை விட்டு கடாபி தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் இருந்தன. இருந்தபோதும், தன் முன்னோர்கள் மரித்த அதே மண்ணில் தானும் மரிக்கவே கடாபி விரும்பினார் என்று கூறிய தாவ், அவர் இப்படி நினைத்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் இங்குள்ள சூழ்நிலையை தவறாகவே கணித்துவிட்டார். அவர் மட்டும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால், சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும் என்றார் தாவ் வருத்தத்துடன்!

கடாபி, அவரது மகன் முஸ்ஸாடிம், அவரது பாதுகாப்பு அமைச்சர் அபு பக்கர் யூனிஸ் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை லிபிய பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடத்தில் புதைக்கப்பட்டனர். இருப்பினும், கடாபியின் உறவினர்கள், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் என ஒருசிலரை இஸ்லாமிய முறைப்படியான கடைசிக் கட்ட சடங்குகளைச் செய்ய அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சரியான இடத்தை மட்டும் காட்டிக்கொடுக்கவில்லை, அது தெரிந்தால் அந்த இடத்தை பின்னாளில் புனிதத் தலம்போல் மாற்றிவிடக்கூடும் என்ற அஞ்சியதால் அவ்வாறு செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

No comments

Powered by Blogger.