யாழ்ப்பாண தமிழர் காணிகளை விற்பதில் ஆர்வம்..?
யாழ்.குடா நாட்டில் காணிப்பதிவு வேலைகள் இடம்பெறுவதால் வெளிநாடுகளில் வாழும் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் பலர் தற்போது இங்கு வந்து தமது காணிகள், வயல்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர். சிலர் தமது உறவு முறையானவர்களில் தமக்கு ஒருநேரம் காணியைத் திருப்பித்தருவார்கள் என்ற நம்பிக்கையுடையவர்களுக்கு எழுதிக்கொடுக்கின்றனர்.
வெளிநாட்டில் வாழும் குடாநாட்டைச் சேர்ந்தவர்களில் சிலர் தமது காணிகளை நிர்வகிக்க சட்ட உரித்து அனுமதியை உறவினர்களுக்கு முன்பு வழங்கியிருந்தனர்.
இப்படியானவர்களும் வந்து சட்ட உரித்து அனுமதியை இரத்துச் செய்துவிட்டுக் காணியை விற்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்படியானவர்களின் காணிகளை விற்றுக்கொடுப்பதில் தரகர்களும் தீவிரமாக செயற்பட்டு வருவதையும் காணமுடிகிறது.
காணிப்பதிவு நடவடிக்கையால் வெளிநாட்டவர்களின் காணிகளை அரசு சுவீகரிக்கவுள்ளதாக சிலர் தெரிவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment