இந்தியாவை தாக்கும் வல்லமையுடைய ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்தது
அணுஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஹாட்ப் 7 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெள்ளிக்கிழமை சோதனை செய்து பார்த்துள்ளது.
700 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணையின் வரம்பிற்குள் இந்தியாவின் பல பகுதிகள் வருகின்றன. ஏவுகணை பரிசோதனையை பார்வையிட்ட முப்படைகளின் கூட்டுத்தலைவர் காலித் ஷமீம் வைன், பரிசோதனை வெற்றிகரமாக நடந்ததாக தெரிவித்தார். பாகிஸ்தான் வெற்றிகரமாக ஏவுகணையை பரிசோதித்ததற்கு அந்நாட்டு அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
Post a Comment