யாழ்ப்பாண நிதி நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கை
யாழ்ப்பாண குடாநாட்டில் புதிய நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படுவது குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1980 களில் குடா நாட்டில் இயங்கிய சில நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக பணத்தை வைப்பிலிடச் செய்து செய்து அந்த நிறுவனங்கள் முகவரியில்லாமல் போனதாகவும் அவற்றில் வைக்கப்பிலிட்டு ஏமாந்தவர்களால இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த நிதி நிறுவனங்கள் தென்பகுதியில் உள்ளவர்களால் நிர்வகிக்கப்படுவதால் இவை எந்த நேரமும் மூடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகள் செய்வதாக சிலர் விண்ணப்பப் படிவங்களை வழங்கி பணம் பெற முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment