Header Ads



''யாழ் அகதிகள்''


(யாழ் முஸ்லிம்  நடத்திய கவிதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கவிதையிது)

எம்.ஜே.எம். வஸீம்
யாழ் - ஒஸ்மானியா கல்லூரி
1990 ம் ஆண்டு, அக்டோபர் 30 ஐ மறவாதே
அதற்கு முன் நீ சிரித்தாய்.. ஆனால்
அதற்கு பின் நீ  சிதறிப் போனாய் அகதியே
பாவம் பரிதாபம்..!

முள்ளில்கூட பூக்கள் உண்டு
முடியும் என்ற சொல்லில் தான் வாழ்க்கை உண்டு
முன்வந்து பொறுப்புக் கொள்
அடங்கி நின்று இருப்புக் கொள்
பக்கங்கள் ஆனது போதும்
தலையங்கம் ஆவது எப்போது..? அகதியே..??

பட்டதுன்பம் போதும்
அனுபவித்த வேதனை போதும்
பொறுத்தது போதும்
பொங்கி எழு அகதியே..!

முன்பு ஒரு காலம் சிரித்தோம்
சிட்டாய் பறந்தோம் ஆனால்
இன்றைய காலம் சில்லறையானோம்
செல்லாக் காசு என்றானோம் இருந்தும்
விடிவு நாள் எப்போது..?
யாழ் அகதிகளின் எழுச்சி எப்போது..??

No comments

Powered by Blogger.