Header Ads



டுனிசீயாவில் இஸ்லாமிய கட்சிக்கு பெரும்பான்மை ஆசனங்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டுனிசியாவின் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதுவரையில் வெளியாகியுள்ள முடிவுகளின் பிரகாரம் இந்தக் கட்சி பெரும்பாலான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

நஹ்ழா கட்சி 40 வீதமான வாக்குகளைப் பெற்று 217 ஆசனங்களில் 60 வீதமான ஆசனங்களை இதுவரை பெற்றுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 217 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்காகவே இந்த  தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.  இந்தத் தேர்தலின் மூலம் நாட்டில் புதிய அரசியலமைப்பை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவுள்ளன

அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களினால் பென் அலியின் 23 வருட கால ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் நடைபெற்ற முதலாவது ஜனநாயக ரீதியிலான தேர்தலாக இது கருதப்படுகின்றது.

No comments

Powered by Blogger.