ஐரோப்பாவில் கடன் நெருக்கடி - தலைவர்கள் கூட்டமும் தோல்வி
"யூரோ' மண்டல கடன் நெருக்கடி தொடர்பாக, பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் நடந்த ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், எவ்வித முக்கிய முடிவும் எடுக்காமல் கலைந்தது. தொடர்ந்து, நாளை மீண்டும் ஒரு கூட்டம் நடக்க உள்ளது. இதில், பிரச்னைக்குத் தெளிவான தீர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில்ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், அதையடுத்து, யூரோ கரன்சி பயன்படுத்தும் 17 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தன. முதல் கூட்டத்தில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்கப்படவில்லை.
பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில்ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், அதையடுத்து, யூரோ கரன்சி பயன்படுத்தும் 17 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தன. முதல் கூட்டத்தில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்கப்படவில்லை.
அயர்லாந்து, போர்ச்சுகல், கிரீசை தொடர்ந்து, தற்போது இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், அந்த நெருக்கடி மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சத்தை நீக்கும் வகையில், பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
கூட்டம் முடிந்த பின், மெர்க்கெல்லும், சர்கோசியும் இணைந்து விடுத்த கூட்டறிக்கையில், "ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்று தயாராகி வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில்,"யூரோ மண்டலக் கடன் நெருக்கடிக்கு முழுமையான தெளிவான தீர்வு காண்பதற்கு, 26ம் தேதி (நாளை) மீண்டும் ஒரு கூட்டம் நடக்க வேண்டும். அதில், யூரோ கரன்சி பயன்படுத்தும் 17 நாடுகள் மட்டும் கலந்து கொண்டால் போதும்' என, சர்கோசி ஆலோசனை தெரிவித்தார். ஆனால், அதை எதிர்த்த பிரிட்டன் பிரதமர் கேமரூன்,"யூரோ கடன் நெருக்கடி பிற நாடுகளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதால், ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளும் கலந்து கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினார். அவரது யோசனைக்குப் பின், நாளை நடக்க உள்ள கூட்டத்தில், 27 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
கடன் நெருக்கடி பிரச்னைக்கு என்ன தீர்வு? : தற்போதைய யூரோ கடன் நெருக்கடிக்கு சில தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்பிற்கு (இ.எப்.எஸ்.எப்.,) கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். (என்னென்ன அதிகாரங்கள் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை) அந்த அமைப்பு ஒரு வங்கியாகச் செயல்பட வேண்டும் என பிரான்ஸ் கூறிய யோசனை நிராகரிக்கப்பட்டு விட்டதாக, ஜெர்மனி அதிபர் தெரிவித்தார்.
ஐரோப்பிய வங்கிகள், கிரீசுக்கு அளித்த கடன் பத்திரங்களில், 60 சதவீதத்தை கழித்து விட வேண்டும். (இது முழுமையான ஒப்புதலைப் பெறவில்லை) இதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தைச் சமாளிக்கவும், வங்கிகள் திவாலாவதைத் தடுக்கும் விதத்திலும், அவற்றின் முதலீடு அதிகரிக்கப்படும். இதற்காக, 100 பில்லியன் யூரோ தொகை வழங்கப்படும்.
இந்த 100 பில்லியன் யூரோ தொகை, ஐரோப்பிய நாடுகளின் அரசுகள், வர்த்தக முதலீட்டாளர்கள், இ.எப்.எஸ்.எப்., ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும். தேவைப்படும் பட்சத்தில், ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்தில் சிற்சில திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். (என்ன திருத்தங்கள் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை)
Post a Comment