Header Ads



யாஹுவை கைப்பற்ற கூகுள் திட்டம்

புகழ்பெற்ற இணையத்தள தேடுபொறி நிறுவனமான கூகுள், யாஹு நிறுவனத்தை வாங்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க பத்திரிகையான வோல்ஸ்டிரீட் ஜெர்னலில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

யாஹு நிறுவனத்தை வாங்க அதிக முதலீடு தேவை என்பதால் அதற்கான நிதியை திரட்ட சில பங்கு முதலீட்டு நிறுவனங்களுடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் எந்ததெந்த நிறுவனங்களோடு கூகுள் பேச்சு நடத்தியது என்பது தெரியவில்லை.

முன்னதாக யாஹுவை கையகப்படுத்த மென்பொருள் நிறுவனமான மைக்ரோ சொப்ட் முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. யாஹுவை வாங்க முயற்சிப்பதன் மூலம் யாஹுவின் பங்கு விலைகளை சந்தையில் உயரச் செய்து அதை கையகப்படுத்தத் துடிக்கும் மைக்ரோ சொப்ட் போன்ற போட்டி நிறுவனங்களின் முயற்சியை முறியடிப்பது என்ற நோக்கத்தையும் கூகுள் கொண்டி ருக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.