"விரைந்து வா சோனகனே புது சோனகதெரு செய்வோம்"
நிரோஸ் ராசிக்
ஆண்டாண்டாய் கூடி வாழ்ந்தோம்
அத்தனையும் இழந்தோம் ஒருநொடி பொழுதிலே
இரண்டு மணி நேர அவகாசம்
இந்த கருப்பு அக்டோபரிலே
சொந்த மண்ணில் அகதியானோம்
சொத்துக்களை இழந்தோம்
சொந்தங்களை இழந்தோம்
செய்வதறியாது நிர்கதியானோம்..!
அத்தனையும் சொல்ல்வதட்கு வார்த்தை இல்லை
அடுதுங்கு ஜென்மம் பிறந்தாலும் மறக்கத்தான் முடியாது
அறுத்தெறிந்த என் சொந்தங்களை....
எங்கள் தொப்புள் கொடி பந்தங்களை..
கூடி வாழ நினைக்கின்றோம் சொந்தங்கள் பல மாறிவிட்டன
கூண்டை விட்டு துறந்து விட்ட பறவைகள் போல்
திசைகள் மாறி முகவரிகளை தேடுகிறோம்..........!
இருபாதொராண்டும் கழிந்துவிட்டது
இன்னல்கள் பல தண்டி ஆண்டவனின் உதவி கொண்டு
நல வாழ்வும் கிடைத்து விட்டது
ஆனால் என் மண் வாசனை என்னை விட்டு விலகவில்லையே...!
முதாதையர் வாழ்ந்த எங்கள் சொந்த சோனகதெரு
முழுதாய் சுதந்திரமாய் உரிமையோடு வாழபோவதேட்போ.....??
விடை தெரியாமல் தேடி அலைகின்றோம்
சொந்த மண்ணில் அகதி அவலபெயர் அழியும் நாள் எப்போ.......... ???
பொறுத்திருப்பார் பூமி ஆழ்வார்
பொங்கி எழு என் சோனக நன்பெனே
பொறுத்தது போதும் எங்கள் தாய் சொனகதேருவை
ஆளுமையுடன் ஆள்வதற்கு புறப்படு
புத்தம் புதிதாய் புது சோனகதெரு செய்வோம்.....!
Post a Comment